உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் பல் மருத்துவருக்கு விலக்கு வேண்டும்

மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் பல் மருத்துவருக்கு விலக்கு வேண்டும்

சேலம்: மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் இருந்து பல் மருத்துவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்க, தமிழக மாநில செயலர் செந்தாமரைக்கண்ணன், நேற்று, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:மருத்துவமனை பாதுகாப்பு சட்டம், கார்ப்ரேட் கிளினிக் உள்ளிட்ட பெரும் மருத்துவமனைகளுக்கு பொருந்துமே தவிர, ஒன்று, இரண்டு இருக்கைகள் வைத்து, பல் சிகிச்சை செய்து வரும் மருத்துவர்களுக்கு ஏற்றதாக இல்லை. தமிழகத்தில், 'பயோ வேஸ்ட்' எனும் உயிர் கழிவு மேலாண்மை சரியாக நடைமுறைப்படுத்தாமல் உள்ள நிலையில், உயிர் கழிவு மேலாண்மை கட்டண முறையில், சில நெறிமுறை, தளர்வுகளை கொண்டு வர, பல ஆண்டுகளாக பல் மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.உயிர் கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு வாரியம், கதீர் வீச்சு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், தீ அணைப்பான் உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதில் பல் மருத்துவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் பல் மருத்துவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை