விளையாட்டு விடுதி கட்ட துணை முதல்வர் அடிக்கல்
ஓமலுார், சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, 2024 முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு, வீரர், வீராங்கனையர் தங்க, 7.93 கோடி ரூபாய் மதிப்பில், விளையாட்டு விடுதி கட்டும் பணியை, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், துணை முதல்வர் உதயநிதி, நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உடனிருந்தார்.தொடர்ந்து கருப்பூரில் நடந்த விழாவில், டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.