உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேவர் ஜெயந்தி விழா பல்வேறு கட்சியினர் மரியாதை

தேவர் ஜெயந்தி விழா பல்வேறு கட்சியினர் மரியாதை

சேலம்:பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 119வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, அப்புசெட்டி தெருவில் உள்ள அவரது சிலைக்கு, தி.மு.க., சார்பில், மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாநகர் செயலர் ரகுபதி, கவுன்சிலர் சபீதா உள்பட பலர் பங்கேற்றனர். தி.மு.க.,வை சேர்ந்த, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனும், தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். கவுன்சிலர்கள் குமரவேல், ஜெயக்குமார், தெய்வலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர். அதேபோல், அ.தி.மு.க., சார்பில் மாநகர் செயலர் பாலு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ..,க்கள் பாலசுப்ரமணியன், ரவிச்சந்திரன், பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.காங்., சார்பில், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, பா.ஜ., சார்பில் மாவட்ட தலைவர் சசிகுமார், சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் மற்றும் சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அருள் உள்பட பல்வேறு கட்சியினர், மரியாதை செலுத்தினர். முன்னதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், மாலை அணிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !