உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆடி 2வது வெள்ளி அம்மனை வழிபட்டு பக்தர்கள் பரவசம்

ஆடி 2வது வெள்ளி அம்மனை வழிபட்டு பக்தர்கள் பரவசம்

சேலம், ஆடி, 2வது வெள்ளியையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் நடை, நேற்று காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர் அம்மனுக்கு அமுதுாட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின் பலவகை மூலிகை, வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம், ஆராதனை செய்து, தங்க கவசத்தில் பெரிய மாரியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் குடும்பம் சகிதமாக நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.கன்னி பெண்கள், திருமண பாக்கியம் வேண்டி, கண்ணாடி வளையல், மஞ்சள் கொம்பு இணைத்த மஞ்சள் கயிற்றுக்கு குங்குமம் இட்டு, அதை முகூர்த்தக்காலில் கட்டி வலம் வந்து வழிபட்டனர். சிலர் குழந்தை வரம் வேண்டி, தொட்டில் கட்டி வழிபட்டனர். கொடிமரம் முன் தீபம் ஏற்றி, உடல் பிணி நீங்க, அங்குள்ள சூலத்தில் உப்பு, மிளகு கொட்டியும் சிலர் வழிபட்டனர். அன்னதானப்பட்டி மாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரம், நெத்திமேடு தண்ணீர்பந்தல் காளியம்மன் ரத்ன அங்கி அலங்காரத்தில் காட்சியளித்தனர். அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் அரசவை தர்பார் அலங்காரம், செங்குந்தர் மாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன் தங்க கவசத்தில் ஜொலித்தனர். எல்லை பிடாரியம்மனுக்கு வெள்ளி கவசம், வளையல் சகிதமாக அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், பொன்னமாபேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் என, மாநகரில், 8 பட்டி, 18 பேட்டைகளில் உள்ள அம்மன் கோவில்கள், மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேண்டுதல் வைத்து அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடி வெள்ளியையொட்டி, அம்மன் கோவில்கள் மின் அலங்காரத்தில் ஜொலித்த படி, திருவிழா கோலம் பூண்டது. சில கோவில்களில் மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !