உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை வழக்கு வாபஸ் பெற ரவுடிகள் மிரட்டலால் தர்ணா

கொலை வழக்கு வாபஸ் பெற ரவுடிகள் மிரட்டலால் தர்ணா

சேலம்: சேலம், கருப்பூர் உப்புகிணறு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சுந்தரேஸ்வரன், 40. இவர் குடும்பத்துடன் மனு கொடுக்க, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தவர், திடீரென அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டா-னது.போலீசார் அறிவுரை கூறி, தர்ணாவை கைவிட செய்தனர். அதன்பின், சுந்தரேஸ்வரன் கூறுகையில்,'' என்னுடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ், 36, திருமணமாகாதவர். மேச்சேரியில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்திருந்த அவர், ஆறு மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். மேச்சேரி போலீசார் கொலை தொடர்பாக வெங்கடேஷ் என்பவரை கைது செய்தனர். தற்போது, ஜாமினில் வெளிவந்த அவர், கொலை வழக்கை வாபஸ் பெற அச்சுறுத்தி, ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அதனால் எங்களின் உயிருக்கும், உடை-மைக்கும் பாதுகாப்பு கேட்டு, மனு கொடுக்க வந்தோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை