உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை வழங்கல்

அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை வழங்கல்

ஏற்காடு:ஏற்காட்டில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சித்ரா, ஒன்றிய செயலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அவர், ஒன்றிய அளவில் கட்சி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில், பல மடங்கு உற்சாகத்தோடு பணிபுரிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அனைவருக்கும் கட்சி வேட்டி, சேலைகளை வழங்கினார். அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் ராஜசேகரன், மாவட்ட இளைஞர் அணி செயலர் அருண், மாவட்ட பிரதிநிதி முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ