உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு டைமண்ட் தரவரிசை அங்கீகாரம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு டைமண்ட் தரவரிசை அங்கீகாரம்

சேலம்: 'ஆர்' எனும் உலக நிறுவன அமைப்பு, கல்வி சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து தரவரிசை அடிப்படையில் அங்கீகரிக்கும் ஓர் முன்னணி அரசு சாரா நிறுவனம். இது நடப்பாண்டு பட்டியலை வெளியிட்டு கற்றல் இலக்கு அடிப்படையில் சிறந்து விளங்கும் கல்லுாரிகளை அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் மருத்துவமனை, புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி, சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, 'டைமண்ட்' தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது. மேலும் குளோபல் பல்கலை தரவரிசை பட்டியலிலும் சிறந்த கற்றல் சூழல் மேம்பாட்டின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து துறை டீன் செந்தில்குமார் கூறுகையில், ''மாணவர்களை வருங்கால சவால்களை எதிர்கொள்ளும்படி தயார் செய்வதே ஓர் சிறந்த கல்வி நிறுவனத்தின் முதற்கடமை. அந்த வகையில் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களை பல்வேறு சிறப்பு பிரிவுகளில் மேம்படுத்தி வருகிறோம். அதன்படி அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.இந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு கல்லுாரியின் பல்வேறு செயல்பாடுகளில் சிறந்த பங்களிப்பாற்றி வரும் டீனை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை