உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை கடைக்காரரிடம் ரூ.2.50 லட்சத்தை நுாதனமாக பறித்த தில்லாலங்கடி கைது

நகை கடைக்காரரிடம் ரூ.2.50 லட்சத்தை நுாதனமாக பறித்த தில்லாலங்கடி கைது

சேலம்: நகை கடைக்காரரிடம் நுாதன மாக, 2.50 லட்சம் ரூபாயை பறித்த, 'தில்லாலங்கடி' வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னையை சேர்ந்த நகை கடை நிறுவனம், பழைய நகைகளை வாங்குவதாக வலை தளத்தில் விளம்பரம் செய்தது. அதை பார்த்த ஒருவர், கடைக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்-போது, 'என் நகையை வங்கியில், 2.50 லட்சம் ரூபாய்க்கு அட-மானம் வைத்துள்ளேன். அந்த பணத்தை தந்தால் நகை யை மீட்டு உங்களிடம் கொடுத்து விடுவேன்' என கூறினார்.நம்பிய கடைக்காரர், ஒரு வாரத்துக்கு முன், அந்த வாலிபர் தெரி-வித்த இடமான, சேலம், சூரமங்கலம் வந்தார். அப்போது அந்த வாலிபர், 'ஓமலுாரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்-துள்ளேன். அங்கே சென்று நகையை மீட்டுத்தருகிறேன். அதனால் என் வங்கி கணக்குக்கு, 2.50 லட்சம் ரூபாயை அனுப்-புங்கள்' என கேட்டார். கடைக்காரரும், பணத்தை அனுப்பினார். பின் கடைக்காரர், ஒரு வாகனத்திலும், வாலிபர் ஒரு வாகனத்-திலும் தனித்தனியே ஓமலுார் புறப்பட்டனர். இதனிடையே வாலிபர் மாயமானார். அதிர்ச்சியடைந்த கடைக்காரர், அவரை தொடர்பு கொண்டபோது, 'கால்' போகவில்லை. ஏமாற்றப்பட்-டதை உணர்ந்த கடைக்காரர், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பிரேம்குமார், 33, என தெரிந்தது. அவரை சூரமங்கலத்தில், போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசா-ரித்ததில், எம்.சி.ஏ., பட்டதாரி என்பதும், ஆன்லைனில் விளை-யாடி வங்கியில் வாங்கிய பணத்தை இழந்ததும் தெரிந்தது. அதே-நேரம் இதுபோன்று நாமக்கல், ஈரோடு, சேலம் பகுதிகளில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை