மேலும் செய்திகள்
'தநைரா' சேலைகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடி
20-Jun-2025
சேலம், காமராஜர் பிறந்தநாளையொட்டி, கைத்தறி ரகங்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டும் என, சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள புறநகர் தலைவர் வேலாயுதம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார். மேலும் கூறியிருப்பதாவது:சுதந்திர போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் முத்லவருமான, காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ல், மத்திய, மாநில அரசு கைத்தறி கதருக்கு, 30 சதவீத தள்ளுபடி கொடுப்பது வழக்கம். இதனால், ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயன் அடைவர். ஆனால், இந்த ஆண்டு இதுவரை தள்ளுபடி வழங்கவில்லை. உடனடியாக தள்ளுபடி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
20-Jun-2025