மேலும் செய்திகள்
குட்டியுடன் சிறுத்தை 'உலா': மக்கள் அதிர்ச்சி
10-Oct-2024
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பச்சமலை அடிவாரத்தில், 3 நாட்களுக்கு முன் சிறுத்தை குட்டியுடன் நடமாடியது, அதன் காலடி தடங்கள் மூலம் தெரியவந்தது. கடந்த, 8ல் கணேசபுரத்தில் உள்ள விவசாயத்தோட்டத்திலும், நேற்று முன்தினம் மாலை, தெடாவூர், தெற்குமணக்காட்டிலும் சிறுத்தை சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்து மக்கள், வீடுகளை உட்புறம் தாழிட்டு வசித்து வருகின்றனர். கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை ரோந்து பணி மேற்கொண்டனர்.
10-Oct-2024