உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவாகரத்து நோட்டீஸ் கணவர் விபரீதம்

விவாகரத்து நோட்டீஸ் கணவர் விபரீதம்

ஓமலுார், ஓமலுார் அருகே இலகுவம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 36. கூலித்தொழிலாளி. இவரது மனைவி நித்யா, 30. 'ஜெராக்ஸ்' கடையில் பணிபுரிகிறார். இவர்களுக்கு, 12 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், 2 ஆண்டுக்கு முன், நித்யா பிரிந்து சென்றார். கடந்த, 14ல் நித்யா விவகாரத்து கேட்டு சம்மன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில் பன்னீர்செல்வம் மனவேதனை அடைந்த நிலையில், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ