தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் துவக்கி வைப்பு
சேலம், தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்டம் சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை, ஹவுசிங் போர்டில் நேற்று நடந்தது.மத்திய மாவட்ட செயரான, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வீடுகள் தோறும் சென்ற தி.மு.க.,வினர், 'ஓரணியில் தமிழ்நாடு' என்பதை வலியுறுத்தி, உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.அதேபோல், சேலம் தெற்கு தொகுதி கிச்சிப்பாளையம், சேலம் மேற்கு தொகுதி மெய்யனுாரில், உறுப்பினர் சேர்க்கையை, அமைச்சர் தொடங்கி வைத்தார். தொகுதி பொறுப்பாளர்கள் இளங்கோவன், விவேக், ராஜசேகர், மேயர் ராமச்சந்திரன், மாநில தேர்தல் பணிக்குழு செயலர் தாமரைக்கண்ணன், மாநகர செயலர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஓமலுார் தொகுதி ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொகுதி பொறுப்பாளர் சுகவனம், மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, ஒன்றிய செயலர்கள் ரமேஷ், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், சங்ககிரி கிழக்கு ஒன்றியம், சின்னாகவுண்டனுார், சாமிநாதன் தோட்ட பகுதியில், உறுப்பினர் சேர்க்கையை, எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்தார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலர் சுந்தரம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஷ், சங்ககிரி நகர செயலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.