அடுத்த 60 நாட்கள் தி.மு.க.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்
சேலம், சேலம், கன்னங்குறிச்சியில், தி.மு.க., அரசின், 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக முதல்வர் முதல், தி.மு.க.வின் கடைநிலை தொண்டர்கள் வரை தயாராகி வருகின்றனர். 75 ஆண்டு காலம் கொள்கைப்பிடிப்போடு உள்ள இயக்கம் தான், தி.மு.க., இன்று யார், யாரோ, இந்த ஆட்சிக்கு சவால் விடுகின்றனர். தி.மு.க., எந்த நெருக்கடியையும் சமாளித்து எதிர்கொள்ளும் வல்லமை உடையது. தி.மு.க.,வினர் வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் விழிப்போடு இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை போன்று ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவை பெற வேண்டும். அடுத்து வரும், 60 நாட்கள் கடுமையாக உழைத்தால், 60 ஆண்டுக்கு அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறுவர். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சேலம் எம்.பி., செல்வகணபதி. மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், கன்னங்குறிச்சி செயலர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் பூபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.