50,000 பேர் திரண்டு வர மேற்கு தி.மு.க., ஏற்பாடு
சேலம், சேலம் புதுபஸ் ஸ்டாண்ட் எதிரே, தி.மு.க., அலுவலகத்தில், மேற்கு மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம் நேற்று மாலை, 4:00 மணியளவில் நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலர் செல்வ கணபதி எம்.பி., பேசுகையில், ''வரும் 20ம் தேதி முதல், ஜூலை 20 வரை, தொகுதிக்கு 40 சதவீதம் பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்கும் பணி முழுவீச்சில் நடக்க உள்ளது. அதன்படி மேற்கு மாவட்டத்தில், 3.5 லட்சம் உறுப்பினர்களை ஒருமாத காலத்தில் சேர்ப்பதற்கான, ஆயத்தப்பணிகளில் கட்சியினர் இப்போதே தனிகவனம் செலுத்த வேண்டும். வரும், 11ல், சேலம் வரும் முதல்வரை வரவேற்க, மேற்கு மாவட்டம் சார்பில், 50,000 பேர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.அதற்கான பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதேபோல, அரசு விழாவிலும் கலந்து கொண்டு, சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் முதலிடத்தை பிடிக்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், எலிசபெத்ராணி, பொருளாளர் பொன்னுசாமி, மேலிட பார்வையாளர் செந்தில்குமார் உள்பட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.