உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காய்ந்து போன மேம்பால புல்தரை

காய்ந்து போன மேம்பால புல்தரை

மகுடஞ்சாவடி, நவ. 2-சேலம்-கோவை பைபாஸ் சாலையில், மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப் அருகே, சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைத்தனர். மேலும் அதன் அடியில், இடைப்பாடி செல்லும் சாலை ஓரமாக இருபுறமும் புல்தரைகள் அமைத்து பராமரித்து வந்தனர்.இந்நிலையில், ஆழ்துளை கிணறில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானதால், புல்தரைக்கு தண்ணீர் பாய்ச்சுவதில்லை. அதனால் தற்போது புல்தரை காய்ந்து சறுகு போல் காட்சியளிக்கிறது. மேலும், அங்கு குடிமகன்கள் இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். எனவே, புல்தரையை மீண்டும் பசுமையாக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி