1 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
சேலம், கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று, பெரிய புத்துாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. டிரைவரிடம் விசாரித்ததில், மல்லுார், வாழக்குட்டபட்டியை சேர்ந்த இளவரசன், 29, என தெரிந்நது. அவரை கைது செய்த போலீசார், ஒரு டன் ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.