உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காரில் டிரைவர் மர்மச்சாவு

காரில் டிரைவர் மர்மச்சாவு

சேலம், டிச. 4-சேலம், அம்மாபேட்டை, சவுண்டம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் யூசுப், 33. கார் டிரைவரான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக யூசூப் தனியே வசித்தார். நேற்று முன்தினம் மது அருந்திய அவர், காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு காரிலேயே துாங்கியுள்ளார். யூசுப்பை, அவரது தந்தை குத்புதீன் தேடியபோது, காரில் மயங்கி கிடந்தார்.அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் யூசுப்பை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ