உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது

டிரைவர் வெட்டிக்கொலை; எலக்ட்ரீஷியன் கைது

ஓசூர்: கெலமங்கலம் அருகே, டிரைவரை வெட்டிக்கொன்ற எலக்ட்ரீஷியனை, போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கெலமங்கலம் அடுத்த கிரிசெட்டிப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 28, டிரைவர்; இவர் நேற்று மாலை, 4:30 மணிக்கு, அப்பகுதியிலுள்ள சாலையில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொன்றார். கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், முருகேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் நரசிம்மன், 30, என்பவரது மனைவி பாரதி, 25, என்பவருக்கும் கடந்த, 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த நரசிம்மன் பலமுறை கண்டித்தும், முருகேசன் தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த நரசிம்மன், நேற்று மாலை முருகேசனை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். நரசிம்மனை நேற்றிரவு கெலமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி