உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டைமிங் பிரச்னையில் தகராறு பஸ் முன் டிரைவர் தர்ணா

டைமிங் பிரச்னையில் தகராறு பஸ் முன் டிரைவர் தர்ணா

ஆத்துார், சேலத்தில் இருந்து சென்னை செல்லும், விழுப்புரம் கோட்டம் கள்ளக்குறிச்சி கிளையை சேர்ந்த அரசு பஸ், ஆத்துாரில் இருந்து மதியம், 12:05க்கு செல்ல வேண்டும்.அதேபோல் சேலம் கோட்டம், ஆத்துார் கிளையை சேர்ந்த, அரசு பஸ், மதியம், 12:07க்கு செல்ல வேண்டும். ஆனால் விழுப்புரம் கோட்ட பஸ் தாமதமாக வந்ததால், சேலம் கோட்ட அரசு பஸ், ஆத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட தயாரானது.இதனால், 2 நிமிடம் தாமதமாக வந்த, விழுப்புரம் கோட்ட பஸ் டிரைவர், கண்டக்டர், சேலம் கோட்ட டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர்.பின் விழுப்புரம் கோட்ட பஸ் புறப்பட்டபோது, சேலம் கோட்ட பஸ் டிரைவர் அருட்செல்வன், விழுப்புரம் கோட்ட பஸ் முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.இதுகுறித்து கேட்டு, விழுப்புரம் கோட்ட டிரைவர், கண்டக்டர், தகராறு செய்து தாக்க முயன்றனர்.இதில் இரு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்ற பஸ் டிரைவர்கள், மக்கள் சமானதானப்படுத்திய பின், இரு பஸ்களும் புறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி