உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொழி தெரியாததால் தாக்கப்படும் டிரைவர்கள்

மொழி தெரியாததால் தாக்கப்படும் டிரைவர்கள்

'மொழி தெரியாததால்தாக்கப்படும் டிரைவர்கள்'வாழப்பாடி, அக். 5-வாழப்பாடி அருகே சேசன்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் தேசிய பொறுப்பாளர் அறிவிப்பு கூட்டம் நேற்று நடந்தது. தேசிய தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சங்க செயல்பாடு, ஓட்டுனர் நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டன.தொடர்ந்து பெரியசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவில் பயணிக்கும் டிரைவர்களுக்கு, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. டிரைவர்களுக்கு கொடுத்த சலுகைகளை, சரியான முறையில் அரசு பராமரிப்பது இல்லை. எரிபொருள் திருட்டு, வாகனத்தில் உள்ள உதிரி பாகங்கள் திருட்டு, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் செல்லும் டிரைவர்களிடம் அதிகமாக நடக்கிறது. மொழி தெரியாததால் டிரைவர்கள் தாக்கப்படுகின்றனர். இதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற முறையில் இந்த தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை