உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ட்ரோன் தயாரிப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

ட்ரோன் தயாரிப்பு பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினரை சேர்ந்த பொறியியல் பட்டய படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த, 18 முதல், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 'தாட்கோ' மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, 'ட்ரோன்' தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, 'எம்பேடட்' சென்சார் சோதனை பயிற்சி, பிரின்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர ஆர்வமுள்ளவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தங்கும் விடுதி, உணவு உள்பட அனைத்து செலவுகளையும், 'தாட்கோ' நிறுவனம் ஏற்கும். www.tahdco.comஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி