போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
வாழப்பாடி: வாழப்பாடி உட்கோட்ட போலீஸ் துறை, வாழப்பாடி விளை-யாட்டு சங்கம், தனியார் பள்ளி, சேலம் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, போதை ஒழிப்பு, சமூக நீதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நேற்று காலை, 6:00 மணிக்கு வாழப்பா-டியில் நடத்தின. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 1,800 பேர் பங்கேற்றனர். 3, 5, 10, 15 கி.மீ., என, 4 பிரிவுகளில் போட்-டிகள் நடந்தன. வாழப்பாடி டி.எஸ்.பி., ஆனந்த் தொடங்கி வைத்தார். புதுப்பா-ளையம் அருகே தொடங்கிய போட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, மன்னார்பாளையம் வழியே மீண்டும் புதுப்பாளையத்தில் நிறைவு பெற்றது. முதல், 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.