போதையில் தகராறு: பீர் பாட்டிலால் குத்தியவர் கைது
கெங்கவல்லி, 'போதை'யில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் கண்பகுதியை ஒட்டி, 'பீர்' பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.தம்மம்பட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல், 23. நேற்று முன்தினம் செக்கு மேட்டில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த, மணிகண்டன், 28, என்பவர், சக்திவேலுடன் வாக்குவாதம் செய்தார்.அப்போது மணிகண்டன், 'பீர்' பாட்டிலை உடைத்து, சக்திவேலின் இடது கண் பகுதியில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். தம்மம்பட்டி போலீசார் நேற்று மணிகண்டனை கைது செய்தனர்.