உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழையால் ஏரி நிரம்பி வீடு, கடையில் தேங்கிய தண்ணீர்

மழையால் ஏரி நிரம்பி வீடு, கடையில் தேங்கிய தண்ணீர்

தாரமங்கலம்: மேட்டூர் காவிரி உபரிநீர் திட்டத்தில், கடந்த செப்., 2ல் தாரமங்கலம் பெரிய ஏரி நிரம்பி, வெளியேறிய தண்ணீர் அடுத்த ஏரியான குருக்குப்பட்டி சென்றது. தொடர்ந்து காவிரி உபரிநீர் நிறுத்தப்பட்டதால், ஏரியில் தண்ணீர் வெளியேறுவது நின்றது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்ததால், தாரமங்கலம் பெரிய ஏரி நிரம்பி தண்ணீர் நேற்று வெளியேறியது. இதில் அடுத்த ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், தண்ணீர் வீடு, கடைகளில் சூழ்ந்து, ஓடை பிள்ளையார் கோவில் எதிரில் உள்ள கால்வாயில் சென்றது. இதனால் அந்த வழியாக சார் பதிவாளர் அலுவலகம், வீடு, கடைகளுக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால், குடியிருப்பில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை