ஓமலுார், காடையாம்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டியில், 70 குடும்பத்தினர் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வரும், 17ல் கார்த்திகை தொடங்க உள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர், மண் விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் ஒருவர், 1,000 முதல், 1,500 விளக்குகளை தயாரிக்கின்றனர். அங்கிருந்து, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெங்களூரு உள்ளட்ட பகுதிகளுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன. இதுகுறித்து அய்யம்பெருமாள், 65, கூறியதாவது: ஆண்டுதோறும் உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை. 1,000 விளக்குகளை, 850 ரூபாய்க்கு மட்டுமே கேட்கின்றனர். ஒரு டிராக்டர் மண், 2,400 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. அவற்றை சுட வைக்க முள் உள்ளிட்டவைக்கு, 1,200 ரூபாய் தேவைப்படுகிறது. பல பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டாலும், மண் விளக்கு மட்டும் குறைந்த விலைக்கே கேட்கின்றனர். இருப்பினும் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சில நாட்களாக விளக்கு உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.-----------