ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரியில் முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு
சேலம், சேலம் ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரியில், உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழரசி அனைவரையும் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தனாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, சென்னை டாக்டர் நடராஜன் முதியோர் அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கலந்து கொண்டு, முதியோர் சமூகத்தில் நடத்தப்படும் விதம், அவர்களுக்கு நடக்கும் வன்கொடுமை, பாதுகாப்பது, உரிமையை மீட்பது உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.இதுகுறித்து மாணவர்களிடையே சுவரொட்டி தயாரிக்கும் போட்டியும் நடந்தது. இதில் சிறந்த மூன்று சுவரொட்டிகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.கல்லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி தெரிவித்தார். மாணவர் செவிலியர் அமைப்பின் ஆலோசகர் சரவணன், கனகதுர்கா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.