உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பொருட்கள் பதுக்கிய முதியவர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கிய முதியவர் கைது

சேலம், சேலம் அம்மாபேட்டை எஸ்.ஐ., புவனேஸ்வரி, அயோத்தியாப்பட்டணம் சோதனைச்சாவடி பகுதியில், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த முதியவரை சோதனையிட்டதில், அவர் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி, குயவன்காடு பகுதியை சேர்ந்த நசீர்அகமது, 61, என்பதும், அவரது வாக்குமூலத்தின்படி, அப்பகுதியில் உள்ள குடோனில் நடந்த சோதனையில், ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 91.500 கிலோ பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 73,880 ரூபாய். இது தொடர்பாக வழக்குபதிந்து, முதியவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !