பைக் மீது கார் மோதி முதியவர் பலி
ஆத்துார் பெத்தநாயக்கன்பாளையம், பனைமடலை சேர்ந்தவர் பெரியசாமி, 52, அவரது நண்பர், தாண்டானுாரை சேர்ந்த மாதையன், 50. இவர்கள், 'ஸ்போர்ட்' பைக்கில், தளவாய்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். நேற்று மதியம், 1:30 மணிக்கு தளவாய்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றபோது, பெங்களூருவில் இருந்து அரியலுார் நோக்கி சென்ற, 'போர்டு' கார், பைக் மீது மோதியது. இதில் பெரியசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாதையன் படுகாயம் அடைந்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆத்துார் ஊரக போலீசார், காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.