உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொப்பையாறு அணையில் மூழ்கி முதியவர் பலி

தொப்பையாறு அணையில் மூழ்கி முதியவர் பலி

ஓமலுார், காடையாம்பட்டி, கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் வேலு, 65. இவரது மனைவி லட்சுமி, 60. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த, 24 இரவு, 8:30 மணிக்கு, தொப்பையாறு அணைக்கு சென்ற வேலு, பரிசல் மூலம் தர்மபுரி, கருங்கல்லுாருக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். வீட்டுக்கு திரும்ப வந்தபோது, பரிசல் இல்லை. பொருட்களை கரையில் வைத்துவிட்டு, அக்கரையில் இருந்த பரிசலை எடுக்க நீந்திச்சென்றார். அப்போது மூழ்கிவிட்டார். நேற்று காலை, தொப்பையாறு நீர்தேக்க பகுதியில் உடல் மிதந்தது. காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ