சரக்கு வேன் - மொபட் மோதல் முதியவர் பலி; 2 பேர் படுகாயம்
கொளத்துார் :ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பொம்மராயனுாரை சேர்ந்தவர் ராமன், 63. அதே பகுதியை சேர்ந்த, அவரது உறவினர் பிரியா, 25. இவரது மகன் தயாமித்ரன், 9. இவர்கள் நேற்று மாலை, 6:00 மணிக்கு, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில், சேலம் மாவட்டம் கொளத்துாரில் இருந்து, பொம்மராயனுார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.சவேரியார்பாளையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் சென்ற சரக்கு வேன், மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்ற ராமன் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த பிரியா, தயாமித்ரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.