உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 7 பவுன் நகை பறித்த வழக்கு முதியவருக்கு 15 மாதம் சிறை

7 பவுன் நகை பறித்த வழக்கு முதியவருக்கு 15 மாதம் சிறை

சேலம் வாழப்பாடி, ஊராண்டிவலசை சேர்ந்த, செல்வம் மனைவி சின்னப்பொன்னு. இவர்களுடன், மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தை சேர்ந்த முகமது மீரான், 62, என்பவர், வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பழகி வந்தார். 2023 நவ., 25ல் சின்னபொன்னு, செல்வம் ஆகியோரை, முகமது மீரான், சேலம் அரசு மருத்துவனைக்கு அழைத்து வந்தார். அங்கு, 7 பவுன் நகையை வைத்திருப்பதாக கூறி வாங்கிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். சின்னப்பொன்னு புகார்படி, சேலம் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து, முகமது மீரானை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் ஜே.எம்.எண்: 3ல் நடந்தது.அதில் முகமது மீரானுக்கு, 15 மாதம் சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் முத்துகிருஷ்ண முரளிதாஸ் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி