மேலும் செய்திகள்
ஆண் சடலம் கண்டெடுப்பு
15-Jun-2025
மேட்டூர், சேலம், பெரியம்புத்துார் புதுநெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் கணேசன், 65. நேற்று காலை, 10:00 மணிக்கு அவரது சடலம் பாதி எரிந்த நிலையில் கருமலைக்கூடல் தகனமேடை அருகில் கிடப்பதாக, பி.என்.பட்டி வி.ஏ.ஓ., சுதாவுக்கு தகவல் கிடைத்தது.அவரது சட்டை பாதி எரிந்த நிலையில், அவரது புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை முகவரியுடன் இருந்தது. முதியவர் நேற்று முன்தினம் இரவு, தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டு எரிந்து விட்டாரா அல்லது மர்மநபர்கள் அவரை எரித்து தகனமேடை அருகே போட்டு விட்டு சென்றனரா என்பது தெரியவில்லை.நேற்று காலை சடலத்தை கருமலைக்கூடல் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எரிந்த முதியவர் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Jun-2025