மேலும் செய்திகள்
பைப் தடுக்கி கீழே விழுந்தவர் பலி
10-Dec-2024
தாரமங்கலம்: தாரமங்கலம், சரவண குப்பண்ண முதலி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், 31. இவரது பாட்டி பழனியம்மாள், 81. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், நேற்று முன்தினம் சேலம் பிரதான சாலையில், தியேட்டர் அருகில் இடது புறமாக சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத பைக் மோதி கீழே விழுந்ததில் நெற்றி, கண் பகுதியில் அடிபட்டது. அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோ-தித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தாரமங்-கலம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்தி நிற்-காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
10-Dec-2024