தேர்தல் விழிப்புணர்வு போட்டி 167 மாணவர்கள் ஆர்வம்
சேலம்: தேர்தல் நடக்கும் காலத்தில், 100 சதவீத தகுதியுடைய வாக்கா-ளர்கள், தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் கமிஷன், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, போட்டி-களை நடத்துகின்றன. அதன்படி சேலம், அம்மாபேட்டை கணேஷ் கல்லுாரி, கோரிமேடு மகளிர் கல்லுாரியில் ஓவியம், ரங்-கோலி, சுவர் இதழ், கட்டுரை போட்டிகளில், 167 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதேபோன்ற விழிப்புணர்வு போட்டி சேலம் அரசு கல்லுாரியில் நாளை நடக்க உள்ளது என, மாநக-ராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.