உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை சேலம் வரும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்

நாளை சேலம் வரும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்

சேலம், நவ. 16-சேலம் மாவட்டத்தில், 2025 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, வரும், 28 வரை, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,269 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள், இன்று, நாளை மட்டுமின்றி, வரும், 23, 24 ஆகிய நாட்களிலும் நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, 3,264 ஓட்டுச்சாவடிகளில் நடக்கிறது.கடந்த, 2006 டிச., 31க்கு முன் வரை பிறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் பெயர் சேர்க்க படிவம், 6, நீக்க படிவம், 7, குடியிருப்பு மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், புகைப்பட அடையாள அட்டை பெறவும், மாற்றுத்திறனாளி என குறிக்க, படிவம், 8ஐ பயன்படுத்தலாம். மேலும், 17 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது, 2007 செப்., 30 வரை பிறந்தவர்கள், 2025 ஏப்., 1, ஜூலை, 1, அக்., 1 ஆகிய காலாண்டு தேதியை தகுதிநாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடையும் நபர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம், 6ல் விண்ணப்பிக்கலாம். பதிவை உறுதிப்படுத்த, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியை பயன்படுத்தலாம். சுருக்கமுறை திருத்த விண்ணப்பம் வரும், 28 வரை பெறப்பட்டு, 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிப்படும். இப்பணி குறித்து பார்வையிட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்தகுமார், நாளை சேலம் வருகிறார் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.சிறப்பு ஏற்பாடுசங்ககிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக, சங்ககிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் மனுக்கள் வழங்க சிறப்பு பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை