உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஈஷா மையத்துக்கு வேலைக்கு சென்ற பணியாளர் மாயம்

ஈஷா மையத்துக்கு வேலைக்கு சென்ற பணியாளர் மாயம்

மேட்டூர், சேலம் மாவட்டம், மேட்டூர் மாதையன்குட்டையை சேர்ந்தவர் கமலா, 50. இவரது மகன் ஜெயசந்திரன், 27, ஈஷா யோகா மையத்தில் வேலை செய்துள்ளார். கடந்த, 2023ல் வேலையை விட்டு நின்ற ஜெயசந்திரன் கடந்த, 13ல் மீண்டும் ஈஷா யோகா மையத்துக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.அன்றைய தினம், அவரது மொபைலை தொடர்ந்து கொண்டு தாய் கமலா பேசியபோது, ஈஷா யோகா மையத்தில் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த, 18ம் தேதி முதல் அவரது மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது. கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்று விசாரித்தபோது ஜெயசந்திரன் வேலைக்கு வரவில்லை என கூறியுள்ளனர். மகனை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகனை கண்டுபிடித்து தருமாறு, நேற்றுமேட்டூர் போலீசில் கமலா புகார் செய்தார். எஸ்.ஐ., பிரசாந்த் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !