மருத்துவமனையில் இன்ஜினியர் மாயம்
சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம், 39. சிவில் இன்ஜினியரான இவர், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து அடிபட்டு, கடந்த, 11ல், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது. ஆனால் கடந்த 15, அதிகாலை, 3:00 மணிக்கு அவர் மாயமானார். அவரது மனைவி சசிகலா, எங்கு தேடியும் கணவரை காணவில்லை. அவர் புகார்படி, அரசு மருத்துவமனை போலீசார் தேடுகின்றனர்.