உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., பிறந்தநாள் கட்சியினர் ரத்த தானம்

இ.பி.எஸ்., பிறந்தநாள் கட்சியினர் ரத்த தானம்

ஆத்துார்: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., பிறந்த நாளை முன்-னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், ஆத்துார் அரசு மருத்துவமனையில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தொடங்கிவைத்தார். கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.அதேபோல், ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி உள்ளிட்ட பகுதி-களில், ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு, ஓமலுார், சங்ககிரி, வீர-பாண்டி, இடைப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில், அ.தி.மு.க.,வினர் சார்பில், இ.பி.எஸ்., தலை-மையில், 2026ல், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது என, மாவட்ட செயலர் இளங்கோவன் கூறினார். எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்ல-தம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ஜெய-காந்தன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் உள்-ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை