உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சரக்கு ஆட்டோவில் பயணிக்க போட்டி

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சரக்கு ஆட்டோவில் பயணிக்க போட்டி

நங்கவள்ளி : கண்ணனூர் மாரியம்மன் கோயில் பண்டிகை முன்னிட்டு கிராமங்களில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படாததால் சரக்கு ஆட்டோக்கள் போட்டி போட்டு பக்தர்களை ஏற்றி சென்றனர். தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன் பக்தர்கள், 1,008 தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். நேற்று கோயில் முன் தீமிதி விழா நடந்தது. நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர்.நிகழ்ச்சியை காண தாரமங்கலம் அருகாமையில் உள்ள சின்னப்பம்பட்டி, கே.ஆர். தோப்பூர், அமரகுந்தி, ஜலகண்டபுரம், நங்கவள்ளி பகுதியில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் தாரமங்கலத்துக்கு சென்றனர். பக்தர்கள் வசதிக்காக தாரமங்கலத்தில் இருந்து சுற்று கிராமங்களுக்கு போதிய டவுன்பஸ்கள் இயக்கப்படவில்லை.அதனால், பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். போதிய டவுன்பஸ்கள் இயக்காததால் சரக்கு ஆட்டோ உரிமையாளர்கள் போட்டி போட்டு பக்தர்களை கிராமங்களுக்கு ஏற்றி சென்றனர். சரக்கு ஆட்டோக்களுக்கு குறைவாக இயக்கியதால் பக்தர்களும் போட்டி போட்டு ஏறி கிராமங்களுக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ