உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில மகளிர் கபடி போட்டி ஈரோடு அணி முதல் பரிசு

மாநில மகளிர் கபடி போட்டி ஈரோடு அணி முதல் பரிசு

ஆத்துார், புங்கவாடி கிராமத்தில் நடந்த, மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில், ஈரோடு அணி முதல் பரிசு வென்றது.ஆத்துார் அருகே, புங்கவாடி கிராமம் முருகன் நகர் பகுதியில், நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி கடந்த, 29, 30ல், நடந்தது. சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு, 50 ஆயிரம் ரூபாயை, ஈரோடு சக்தி பிரதர்ஸ் அணி வென்றது. இரண்டாம் பரிசு, 40 ஆயிரம் ரூபாயை, சேலம் கே.ஏ.எம்.சி., அணியினரும், மூன்றாம் பரிசு, 30 ஆயிரம் ரூபாயை, ஈரோடு சக்தி அணியினரும் வென்றனர். ஆத்துார், மஞ்சினி, கெங்கவல்லி, பைத்துார், கடம்பூர் சுற்றுவட்டார பகுதியினர் போட்டியை கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி