விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் ஓய்வூதியம்
சேலம் சேலம் தி ட்ரு சாய் ஒர்க்ஸ்(டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தில் பணியாற்றிய சவுந்தரராஜன், கடந்த ஆண்டு ஜூன், 9ல், பணி முடிந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர்களது குடும்பத்தினருக்கு, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல அலுவலக இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன்(பொ), மாத ஓய்வூதியமாக, 11,970 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதன்படி காப்பீட்டாளர் அலுவலகத்தில், கடந்த, 23ல், சேலம் இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் ஜெனோவா, இறந்த சவுந்தரராஜன் குடும்பத்தினரிடம், ஓய்வூதியத்தை வழங்கினார். அப்போது, தி ட்ரூ சாய் ஒர்க்ஸ் ஹெச்.ஆர்., சக்திவேல் உடனிருந்தார்.