3 மாதம் தாமதம் ஆனாலும் முழுசா கிடைக்கல அரசு பள்ளிகளில் சீருடை வழங்குவதில் குளறுபடி
சேலம்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்று மாத தாமதத்துக்கு பின் வழங்கப்பட்ட சீருடையும், பற்றாக்குறை-யாக இருப்பதால், ஆசிரியர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், 8 ம் வகுப்பு வரை, சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிய-ருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகின்றன.பள்ளி திறந்தவுடன் வழங்க வேண்டிய சீருடைகள், நடப்பு கல்-வியாண்டில் முதல் பருவம் முடியும் வரை, அதாவது மூன்று மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. இதனால், சொந்த செலவில், சீருடை தைக்க, பல இடங்களில் பெற்றோர் கட்டாயப்-படுத்தப்பட்டனர்.இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 7 ல் பள்ளி திறந்த பின், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக-ளுக்கு சீருடைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட-மாக ஒரு செட் சீருடைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையளவுக்கு வழங்காமல், பற்-றாக்குறையாக வழங்கப்படுவதால், குளறுபடி நடக்கிறது. ஆசிரி-யர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளியில் உள்ள மாணவர்கள் வருகை, எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களும், எமிஸ் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், பள்ளி மாணவர்களுக்கு சீருடையும் தயாரிக்கப்படுகிறது.ஆனாலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், புதிதாக ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு, முழுமையாக சீரு-டைகள் வழங்கப்படவில்லை. ஏற்கனவே சீருடை வழங்கியதில் மூன்று மாதம் வரை தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதையும் முழுமையாக வழங்காமல் இழுத்தடிப்பது, பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள பதிவில், எத்தனை மாணவர்களுக்கு, சீருடை வழங்க வேண்டும் என துல்-லியமாக கண்டுபிடிக்க முடியும் என்ற நிலையிலும், இந்த பற்றாக்-குறை வினியோகம் ஏன் என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.