மரக்கன்றை நட்டு பராமரிக்க அனைவரும் கைகோர்க்கணும்
ஆத்துார்: ஆத்துார் அருகே மஞ்சினியில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. அப்பள்ளி முன்னாள் மாணவரான, தற்போதைய துணை கலெக்டர் சக்திவேல், அவரது மனைவியும் ஆசிரியையுமான விஜயா ஆகியோர், அவர்களது சொந்த செலவில் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர். அப்போது வேம்பு, மகிழம், இலுப்பை, பாதாம், பூவரசு, பனை உள்பட, 70 மரக்கன்றுகளை நட்டார்.தொடர்ந்து சக்திவேல் பேசுகையில், ''போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு மரம் வெட்டப்படும்போது குறைந்தபட்சம், 2 மரக்கன்றுகளையாவது நட வைக்க வேண்டும். அப்போது மழை பெறுவதோடு எதிர்கால சந்ததிக்கு பசுமையான பகுதியை அளிக்க முடியும். அதனால் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்,'' என்றார்.ஆத்துார் பசுமை மைய செயலர் மணி, ஊராட்சி தலைவர் இசைஅழகன், தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.