உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனம் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

சரக்கு வாகனம் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த அனுப்பூரை சேர்ந்தவர் துரைசாமி, 59. முன்னாள் ராணுவ வீரரான இவர், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள ரயில்வே கேட்டில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு பணி முடிந்து, வாழப்பாடியில் இருந்து அனுப்பூர் நோக்கி, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். பேளூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேளூரில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததோடு, துரைசாமி மீது மோதி, அருகே இருந்த சாலையோர கடைகளுக்குள் பாய்ந்து சென்று நின்றது. இதில் துரைசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி சசிகலா புகார்படி வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை