உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அவசர நிலையை உணர்த்த கண்காட்சி

அவசர நிலையை உணர்த்த கண்காட்சி

சேலம்: காங்., கொண்டு வந்த, 'அவசர நிலை'யின், 50ம் ஆண்டு கருத்த-ரங்கம், பட கண்காட்சி, சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், மரவனேரி, மாதவம் வளாகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். பா.ஜ., ஆன்-மிகம், ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன், 'அவசர நிலை' காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், தகவல்களை விளக்கினார். சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்பட பலரும் பேசினர். மேலும் அவசர நிலை காலகட்டத்தை உணர்த்தும்படி, புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது.அதேபோல் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்-ளியில், மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், கருத்த-ரங்கம் நடந்தது. தேசிய சிறுபான்மையினர் அணி செயலர் இப்-ராஹிம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை