நெற்பயிரில் நோயை கட்டுப்படுத்த விளக்கம்
சங்ககிரி: சங்ககிரி வேளாண் உதவி இயக்குனர் விமலா அறிக்கை: தேவூர் சுற்றுவட்டாரத்தில், 3,950 ஹெக்டேரில், நெல் சாகுபடி செய்யப்-பட்டு தற்போது பூக்கள் பூக்கும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் மழையால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி மிக குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. இதனால் நெல் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து விவசாயிகளும் வயலில் தண்ணீர் தேங்-காமல் குறைவான தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவை மீறி தழைச்சத்து போடக்கூடாது. புகையான் பூச்சிகளை உடனே கட்டுப்படுத்த, மழை நின்ற பின், எத்திபுரோல், 10.1 சதவீதம், பைமெட்ரோசின், 40 சதவீதம் அல்-லது பியூப்ரோபேசின், 25 சதவீதம், ஈ.சி., 2 மில்லி லிட்டர் அல்-லது இமிடாகுளோபிரிட் 17 சதவீதம், எஸ்.எல்., 100 மி.லி., என்ற பூச்சிக்கொல்லி ரசாயன மருந்துடன், அசிபேட் என்ற பூஞ்சான் மருந்தை கலந்து, நெல் பயிரின் அடி பாகத்தில் உள்ள புகையான் பூச்சிகள் நனையும்படி, விசைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.