95 வயதில் இறந்த மூதாட்டி கேக் வெட்டிய குடும்பத்தினர்
பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலை சேர்ந்த ராமன் மனைவி வெள்ளையம்மாள், 95. இவருக்கு, 6 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில் வயது மூப்பால், வெள்ளையம்மாள் நேற்று உயிரிழந்தார். அவர் முன்னதாக, மகன்கள், பேரன், பேத்திகளிடம், 'நான் இறந்துவிட்டால் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் அடக்கம் செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தார். இதனால், 6 மகன்கள், ஒரு மகள், 24 பேரன், பேத்திகள், 25 கொள்ளு பேத்திகள் உள்ளிட்டோர், 10 கிலோ, 'கேக்' வெட்டி கொண்டாடினர். பின், வெள்ளையம்மாள் உடலை, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.