உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில், சிறந்த வேளாண் தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் தலைமை வகித்தார்.சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், திருந்திய நெல் சாகுபடிக்கு ரகம் தேர்வு, பாய் நாற்றங்கால் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து விளக்கினார். வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் வல்லுனர் சந்திரசேகரன், மண் மாதிரி சேகரித்தல், விதை நேர்த்தி குறித்து விளக்கினார். ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, உதவி மேலாளர் ரேணுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி