உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் விவசாயி பலி: கார் நாசம்

விபத்தில் விவசாயி பலி: கார் நாசம்

சங்ககிரி: சங்ககிரி, வைகுந்தம் மேல் வாழக்குட்டையை சேர்ந்த விவசாயி பால்ராஜ், 50. இவர் நேற்று காலை, 11:45 மணிக்கு சங்ககிரியில் இருந்து வைகுந்தம் நோக்கி, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார்.சங்ககிரி, ஆவரங்கம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சா-லையில் வந்தபோது, கோவையில் இருந்து, சேலம் நோக்கி வந்த, 'எர்டிகா' கார், மொபட் பின்புறம் மோதியது. இதில் பால்ராஜ் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார்.காரை ஓட்டி வந்த, கேரளாவை சேர்ந்த அஸ்வின் சுரேஷ், 35, காரில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார். உடனே கார் தலைகீ-ழாக கவிழ்ந்து தீப்பற்றியது. அஸ்வின் சுரேைஷ, மக்கள் மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சங்க-கிரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் நாசமானது. சங்ககிரி போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை