உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் விவசாயி பலி: ஆசிரியர் மீது வழக்கு

விபத்தில் விவசாயி பலி: ஆசிரியர் மீது வழக்கு

தலைவாசல்:தலைவாசல், காட்டுக்கோட்டை ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில், 40. விவசாயியான இவர், நேற்று மாலை, 5:05 மணிக்கு தோட்டத்தில் இருந்து, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, 'சான்ட்ரோ' கார் மோதியதில், செந்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், காரை ஓட்டி வந்த, கெங்கவல்லியை சேர்ந்த, சாத்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜா, 51, மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல் ஆத்துார், அப்பமசமுத்திரம் ஊராட்சி, பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை, 55. கூலித்தொழிலாளியான இவர், நேற்று இரவு, 7:05 மணிக்கு, தென்னங்குடிபாளையம் மேம்பாலம் வழியே, 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். அப்போது டயர் பஞ்சராகி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, சரக்கு வேனின் பின்புறம், மொபட் மோதியது. இதில் பிச்சைப்பிள்ளை சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி